உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 20, 2024

Hindustan Times
Tamil

உங்கள் உடல் ரீதியான செயல்பாட்டுக்கு கல்லீரல் இயக்கம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எனவே கல்லீரல் செயல்பாட்டை சீராக வைக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

பெர்ரி 

ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் பாலிபினால்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலில் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது

நட்ஸ்

இவற்றில் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்சிஜனேற்ற சேதத்தை தடுக்கிறது

மீன்

மத்தி, சூரை, சாலமன் போன்ற மீன வகைகளில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலில் அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது

சிலுவை காய்கறிகள்

இலைகளுடன் இருக்ககூடிய சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, கேல், முட்டைகோஸ் போன்றவற்றில் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பூண்டு

இதில் இருக்கும் சல்பர் சேர்மானம் கல்லீரலில் நொதிகளை தூண்டி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது

பிளாக் காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னெவல்லாம் என்பதை பார்க்கலாம்