உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க இயற்கையான வழிகளில் ஒன்றாக பீட்ரூட் ரெசிப்பிக்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் வகையில் சுவையான பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 27, 2025

Hindustan Times
Tamil

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த சூப் இரத்த சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது. உடலில் இரத்தத்தின் அளவையும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது 

பீட்ரூட் சூப் செய்வதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய், பிரியாணி இலை, இரண்டு பல் பூண்டு, ஒரு அங்குல இஞ்சி, இரண்டு சின்ன வெங்காயம், ஒன்றரை கப் பீட்ரூட் சிறு துண்டுகளாக வெட்டியது, ஒரு கேரட், ஒரு தக்காளி, உப்பு, தண்ணீர், ஒரு தேக்கரண்டி நொறுக்கப்பட்ட மிளகு, அலங்கரிக்க கிரீம் மற்றும் புதினா

ஒரு பிரஷர் குக்கரில் வெண்ணெய், பிரிஞ்சி இலை, பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது மென்மையாகும் வரை வதக்கவும்

பின்னர் பீட்ரூட், கேரட், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 விசில் வரை வேகவைக்கவும்

சமைத்த கலவையை ஆறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஒதுக்கி வைக்கவும். அடுத்து, காய்கறிகளை ஒரு பிளெண்டரில் மாற்றி மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை அரைக்கவும்

இந்த அரைத்த பீட்ரூட் கலவையை கடாயில் ஊற்றி, ஏற்கனவே வடிகட்டிய நீரை சேர்த்து கலக்கவும். பின்னர் சூப்பில் கூடுதல் தண்ணீர் சேர்க்கவும்

இந்த சூப்பை கொதிக்க வைத்து, நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு சேர்த்து கிளறி, இறுதியில் கிரீம் மற்றும் ஒரு சிறிய புதினா துண்டுடன் அலங்கரிக்கவும்

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva