புத்துணர்ச்சி பானமான காபி உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் சில தவிரக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காபிக்கு மாற்றாக ஆரோக்கிய நன்மைகள் கொண்ட புத்துணர்ச்சி பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 12, 2024

Hindustan Times
Tamil

உலகம் முழுவதும் அதிகம் பேர் பருகும் பானமாக காபி இருந்து வருகிறது. காபியை போல் இன்ஸ்டன்ட் புத்துணர்ச்சியும், ஆற்றலும் தரக்கூடிய பானங்களும் ஏராமாக இருக்கின்றன

மட்சா  டீ

க்ரீன் டீ இலைகளை கொண்டு தயார் செய்யப்படும் மட்சா டீ பவுடர். அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தியானைன் இதில் நிறைந்திருப்பதால் மனஅழுத்தத்தை குறைத்து, ஆற்றலை மேம்படுத்துகிறது

பெர்ரி ஸ்மூத்தி

பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்ப்பெர்ரி பழங்களை வைத்து ஸ்மூத்தி தயார் செய்து பருகுவதன் மூலம் சோர்வுகளில் இருந்து விடுபடலாம்

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் கலோரிகள் நிறைந்த கஃபைன் இல்லாத பானமாக உள்ளது. இதில் இருக்கும்  வைட்டமின் சி உடலுக்கு ஆற்றலை தந்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

ஆப்பிள் சீடர் வினிகர்

வைட்டமி பி நிறைந்திருக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி உடலுக்கு வேண்டிய ஆற்றலை தருகிறது

க்ரீன் டீ

எல்-தியானைன் நிறைந்திருக்கும க்ரீன் டீ பருகுவதால் உடனடி ஆற்றலை பெறலாம்

தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதை பார்க்கலாம்