பச்சை முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம்.
pixa bay
முட்டையில் வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட 7 வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளன.
pixa bay
ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும் 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கும்.
pixa bay
முட்டையில் சால்மோனல்லா போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே முட்டையை அவிக்கும்போது அவை இறந்துவிடும் என்பதால் முட்டையின் மூலம் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய் த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
pixa bay
பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடின் எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
pixa bay
அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதனால் முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தைவிட பயாட்டின்தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே எப்போதும் நல்லது.