தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க!

By Pandeeswari Gurusamy
May 08, 2025

Hindustan Times
Tamil

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் வயிற்று பிரச்சனைகள் குறையலாம். மலச்சிக்கல் பிரச்சனையும் குறையும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் என கூறப்படுகிறது.

உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் போது, சருமமும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

நீர் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது  என கூறப்படுகிறது.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது சோர்வைக் குறைக்கிறது மற்றும் நாள் முழுவதும் கொஞ்சம் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது என நம்பப்படுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலம் சமநிலையில் இருக்கும், இது உணவை நன்றாக ஜீரணிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா.. நிபுணர்கள் விளக்கம்!