கோடை காலத்தில் கண்டிப்பாக சாப்பிடிக்கூடிய பழமாக தர்ப்பூசணி இருந்து வந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகளும் ஏற்படலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 07, 2024
Hindustan Times Tamil
தர்ப்பூசிணியில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் அவற்றை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
செரிமான பிரச்னை, கல்லீரல் அழற்சி. சரும் பிரச்னை என பல்வேறு பாதிப்புகள் தர்ப்பூசணியை அதிகமாக சாப்பிடுவதனால் ஏற்படும்
அளவுக்கு அதிகமான தர்ப்பூசணி வயிற்றுக்க அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசம், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படும்
ரத்த சர்க்கரை அளவில் திடீர் ஏற்றத்தை ஏற்படுத்தும். எனவே தர்ப்பூசணி சாப்பிடுவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்
சருமம் தொடர்பான அலர்ஜிகள் உருவாகும். தற்காலிக சரும பிரச்னைகளான லிக்கோபினிமியா போன்ற பாதிப்புகள் வரும்
லைகோபீன் அதிகரிப்பால் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்னையும், கல்லீரல் அழற்சியையும் கொடுக்கும்
பொட்டாசியம் சத்துக்களின் ஆதாரமாக திகழும் தர்ப்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் இருதய செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இதயதுடிப்பில் மாற்றம் அல்லது நாடித்துடிப்பு குறைவாகும்
Gold Rate : வரலாற்றில் முதல் முறையாக ரூ.8000 த்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம்!