நாள்தோறும் சாப்பிடக்கூடிய பழ வகைகளில் மாதுளையும் முக்கியமானதாக உள்ளது. இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 24, 2024

Hindustan Times
Tamil

மாதுளையில் இருக்கும் பாலிபினால்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதன் பளிச்சிடும் சிவப்பு நிறத்தை பெற உதவுகிறது. இதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

டயட்ரி நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என நிறைந்திருக்கும் மாதுளையில் புனிகலஜின், புனிசிக் அமிலங்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த சேர்மானங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிப்பை தருகிறது

மாதுளையை நேரடியாக சாப்பிட்டால் மட்டுமே அதன் சத்துக்களை முழுமையாக பெறலாம். சிலர் இதை ஜூஸ் ஆகவும், தேநீராகவும் பருகுகிறார்கள். உங்கள் உடல் ஆரோக்கிய தேவைக்கு ஏற்ப இதை எந்த முறையிலும் எடுத்துக்கொள்ளலாம்

இதய ஆரோக்கியம், நுரையிரல் செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் என பல்வேறு நன்மைகளை கொண்டதாக மாதுளை உள்ளது

இதில் இருக்கும் பாலிபினால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக ஜூஸ் வடிவல் கிடைப்பதுடன் ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையை பூர்த்தி செய்கிறது. க்ரீன் டீ, ரெட் ஒயினை காட்டிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சத்து அதிகமாகவே உள்ளது

இருதயம், அதன் தமனிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதயத்துக்கு ரத்து ஓட்டத்தை அதிகரித்து, கொல்ஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

நுரையிரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதிகமாகவே மாதுளை எடுத்துக்கொள்ளலாம்

வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்கப்படுத்தி, நோயை உண்டாக்கும் நோய் கிருமிகளை அழிக்கிறது

மாதுளையில் இருக்கும் பிளேவனால்கள், அழற்சிக்கு எதிரான பண்புகள் எலும்புபுரை, முடக்கு வாதம், குருத்தெலும்பு சேதம் ஆகியவற்றின் பாதிப்புகளை தடுக்கிறது

பயணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்?