குழிப்பேரி என்று அழைக்கப்படும் பீச் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 14, 2024

Hindustan Times
Tamil

ஒரேயொரு கொட்டையுடன் ப்ரஷ் பழமாக இருக்கும் பீச் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டிருக்கும் பழமாக உள்ளது

சருமம், இதயம், குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் பழமாக பீச் பழம் உள்ளது

நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் பீச் பழம் வயது முதிர்வு தோற்றத்தையும் பல்வேறு வகையான நோய் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது

நார்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம், குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது

இதில் இருக்கும் சேர்மானங்கள் இதய நோய் பாதிப்புக்கான ஆபத்துகளை குறைக்கிறது

சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுவதோடு, சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து தடுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளது

உடலில் ஏற்படும் அலர்ஜிக்கு எதிராக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பில் அலர்ஜென்கள் காரணமாக ஏற்படும் தாக்கத்தை குறைக்கிறது

கோடை கால சிறப்பான உணவுகள்