கொய்யா பழம், கொய்யா இலை என இரண்டிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 04, 2024

Hindustan Times
Tamil

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை கொய்யைவில் நிறைந்து காணப்படுகின்றன

செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலி போன்றவற்றுக்கு தீர்வு அளிக்கிறது

ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடிய பழமாக கொய்யா உள்ளது. கொய்யா இலைகளை வைத்து டீ தயார் செய்து பருகலாம்

கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கிறது

பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலிக்கு தீர்வு அளிக்கிறது. எனவே கொய்யா சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது

ரத்த அழுதத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கொய்யா இல்லை அல்லது கொய்யா டீ உதவுகிறது. கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது

வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து நோய் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்