பெருஞ்சீரகம் உடலில் நிகழ்த்தும் அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 22, 2024

Hindustan Times
Tamil

மசாலா பொருள்களில் ஒன்றான பெருஞ்சீரகம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நன்மைகளும் உள்ளன

வலி நிவாரணியாகவும், வயிற்றுப்போக்கு பாதிப்பை நிறுத்துவது முதல் பெருஞ்சீரகத்தில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் வலியை போக்குவதில் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பைச் சுருக்கங்களை போக்கி,  டிஸ்மெனோரியாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வலியைக் குறைக்கும்

பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பாதிப்பை குறைக்கிறது

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்வதில் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது

சிறந்த வலி நிவாரணியாக இருந்து வரும் பெருஞ்சீரகம் உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கு தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது

காஃபைன் இல்லாமல் இருக்கும் பெருஞ்சீரகத்தை கலந்து டீ, காபிக்கு பதிலாக பருகலாம். உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது 

ஏப்ரல் 20-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்