பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 22, 2024

Hindustan Times
Tamil

பிஸ்தா சுவை மிகுந்த கொட்டை வகையாக இருப்பதோடு புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. உங்களது டயட்டில் சேர்க்ககூடிய சிறந்த உணவாக உள்ளது

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

பீட்டா கரோடீன், காமா டாக்கோபிரால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொல்ஸ்டரால், ரத்த சர்க்கரை அளவை குறைத்து இதய நோய் பாதிப்பு ஆபத்தை குறைக்கிறது

எடை குறைப்புக்கு உதவுகிறது

கொழுப்பு அதிகமாக இருந்தாலும், குறைவான கலோரிகளை கொண்டிருப்பதால் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. அதிக புரதம், நார்ச்சத்து காரணமாக வயிறு நிரம்பிய உணர்வை நிண்ட நேரம் தருகிறது. இதனால் கலோரிகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கிறது

செரிமான ஆரோக்கியத்து நல்லது

பிஸ்தாவில் இருக்கும் நார்ச்சத்துகள் செரிமானத்து உதவுகிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்தி, குடலில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கு ஆதரவு அளிக்கிறது

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட பிஸ்தா ரத்த சர்க்கரை அளவில் தாக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கார்டினாய்ட்கள், பினோலிக் சேர்மானங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

பார்வைதிறனை பாதுகாக்கிறது

பிஸ்தா இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான லூடின், ஜியாக்சாந்தின் ஆகியவை கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுக்கிறது. ப்ளூ லைட், வயது தொடர்பான கண் சீரழிவு போன்ற பிரச்னைகள் ஏற்டாமல் பாதுகாக்கிறது

’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?