தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் நிகழும் ஆரோக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 27, 2024
Hindustan Times Tamil
ஆப்பிளை அப்படியை தோல் நீக்காமல் தினமும் சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன
நாள்தோறும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் நிறைந்த மாற்றங்களை பார்க்கலாம்
ஆப்பிளில் நிறைந்திருக்கும் பெக்டின், குவார்செடின் ஆகியவை ப்ரீபயோடிக்காக செயல்பட்டு குடல் ஆரோக்கியத்துக்கு ஆதரவு தருகிறது
அழற்சிகளுக்கு எதிரான சேர்மானங்கள், நார்ச்சத்து, குவார்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைக்கிறது. குறிப்பாக சுவாச அமைப்பில் ஏற்படும் அழற்சிகளை குறைக்கிறது
மாரடைப்பு, பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தம் அடிப்படையான ஆபத்து காரணியாக உள்ளது. ஆப்பிள் தோல்களில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சீரான ரத்த ஓட்டத்தை தக்க வைக்க உதவுகிறது
இதய நோய் பாதிப்புக்கு அடிப்படை காரணியாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளது. நாள்தோறும் ஆப்பிள் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது
ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து கணையத்தை பாதுகாப்பாக வைப்பதுடன், ரத்த ஓட்டத்தில் குளுக்கோய் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்