உங்கள் உணவு டயட்டில் நார்ச்சத்து சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 31, 2025

Hindustan Times
Tamil

நார்ச்சத்து உணவுகள் செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியம், உடல் எடையை நிர்வகிப்பது என பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாக உள்ளது

ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை நார்ச்சத்து உணவுகள் தடுக்கிறது. டயபிடிஸ் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

நார்ச்சத்து உணவுகள் குடலுக்கு துடைப்பம் போல் செயல்படுகிறது. நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுவதுடன், செரிமானத்தை எளிதாக்குகிறது

நார்ச்சத்து மிக்க டயட்கள் பாலிப்கள் உருவாவதற்கும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது 

நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகும். எனவே வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேர தருவதுடன், உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

நார்ச்சுத்து மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் குடல்களில் அழற்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது

அதிகமாக நார்ச்சத்து உணவு சாப்பிடுவது பெண்களுக்கு மார்பக புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது

இதய நோய் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது 

கற்றாழை கொடுக்கும் நன்மைகள்