காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பேரிச்சை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 29, 2025
Hindustan Times Tamil
பேரிச்சையில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்துகள் இருக்கின்றன
பேரிச்சையை ஊற வைத்து சாப்பிடுவது நன்மை என கூறப்படுகிறது. இவ்வாறு சாப்பிடுவதால் ஏராளமான உடல் கோளாறுகள் தணிக்கப்படும்
இதில் இருக்கும் ஊட்டச்சத்து பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் பல்வேறு நோய் பாதிப்பை தடுக்கிறது
பேரிச்சையில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், செலனியம் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது
அத்துடன் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவை அதிகரித்து, பல்வேறு தீவிரமான நோய் பாதிப்புக்கு எதிராக தடுக்கிறது
பெண்களுக்கான மாதவிடாய் வலியை குறைக்கிறது. எனவே மாதவிடாய் வலியை தணிக்க பெண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சை பழத்தை சாப்பிடலாம்
இரவில் பேரிச்சையை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது நேரடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிப்பதோடு, குடல் புழுக்களும் கொல்லப்படுகிறது
உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!