சீதாப்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 03, 2025
Hindustan Times Tamil
மிகவும் சுவை மிகுந்த பழமாக இருக்கும் சீதாப்பழம் குறைவான கலோரிகளுடன் அதிகப்படியான நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழமாக உள்ளது
குறைவான கலோரிகள் இருப்பதால் எடைகுறைப்புக்கு உதவுகிறது. எனவே இதை ஸ்நாக்ஸ் ஆக கூட சாப்பிடலாம்
டயட்ரி நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது
சீதாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, கரோடினாய்ட்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் ப்ரீ ரேடிக்கல்கள் உடல் செல்களை பாதுகாக்கிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய் பாதிப்புகளின் ஆபத்தை குறைக்கிறது
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி, பளபளப்பை தருகிறது
அதிகப்படியான நீர்ச்சத்து நிறைந்திருக்கும் சீதாப்பழம் உடலை நீரேற்றமாக வைத்துகொள்ள உதவுகிறது
சீதாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உடலின் சோடியம் தாக்கத்தை சமநிலை செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
உடல் ஏற்படும் அழற்சிகளை போக்கு உதவுகிறது. மூட்டு வலி பிரச்னை இருப்பவர்களுக்கு வலியை போக்க உதவுகிறது. அத்துடன் தொற்றுகளுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இனிப்புத்தன்மை இருந்தாலும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. எனவே டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது
அதிகப்படியான வைட்டமின் ஏ இருப்பதால் பார்வை திறனை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வயது காரணமாக ஏற்படும் மாகுலர் சிதைவை தடுக்கிறது
பிளேவனாய்ட்கள் போன்ற ஆண்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சிக்கு எதிராக போராடுகிறது. இது சில புற்றுநோய் பாதிப்பின் ஆபத்தை குறைக்கிறது
ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..