காலை உணவாக சாக்லேட் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 21, 2024

Hindustan Times
Tamil

சாக்லேட் சுவை மிக்கதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள் இருக்கின்றன

காலையில் சாக்லேட் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதோடு, அறிவுசார் செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது

சாக்லேட்களில் வைட்டமின் ஏ,சி, ஈ போன்ற பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது. சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்களை பெறலாம்

உங்கள மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மகிழ்ச்சி ஹார்மோன்களான செரோடோனின் போன்றவற்றை வெளியிடுகிறது. எனவே காலை உணவுக்கான சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது

பிளேவனாய்ட்கள் சாக்லேட்களில் அதிகம் உள்ளன. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்ட ஆக்ஸிடன்ட்களால் செல்கள் சேதமடைவதை மெதுவாக்குகிறது

டார்க் சாக்லேட்கள் வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தருகிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுவதுடன் எடை குறைப்புக்கும் வழி வகுக்கிறது

தொடர்ச்சியாக சாக்லேட் சாப்பிடுவதனால் அறிவுசார் செயல்பாடு, நினைவாற்றல் போன்றவை அதிகரிக்கும்

இருதய தமனிகளுக்கு நெகிழ்வு தன்மையை பெற உதவுகிறது. கோகோவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ரத்தம் உறைவதை தடுப்பதால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது 

ஜூலை 22-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்