சமையலில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் மல்லி விதைகள் மற்றும் கொத்த மல்லி ஊற வைத்த தண்ணீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 05, 2025
Hindustan Times Tamil
நார்ச்சத்து மற்றும் அடிப்படை எண்ணெய் சத்துக்கள் நிறைந்ததாக மல்லி விதைகள் இருக்கின்றன. செரிமான நொதிகளை தூண்டுவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தி வயிறு உப்புசம் ஆவதை தடுக்கிறது
மல்லி விதைகளில் இருக்கும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது
உடலில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்துகளை நீக்குகிறது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுத்து எடையிழப்புக்கு வழி வகுக்கிறது
மல்லி விதை ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகின்றன. இதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சரும தொற்று மற்றும் முகப்பரு ஏற்படுவதை தடுத்து சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது
கெட்ட கொல்ஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய் நோய் பாதிப்புகளை தடுக்கிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கும் மல்லி விதைகள் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது
ஊறவைத்த மல்லி விதை தண்ணீர் பருகுவதால் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. குறிப்பா பாதரசம், ஈயம் போன்றவற்றை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது
ஒரு கையளவு மல்லி விதைகளை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெறலாம் என கூறப்படுகிறது
நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றுங்கள் உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன