காபி பலருக்கும் பிடித்த பானமாக இருந்தாலும் பேரிச்சை விதையில் காபி தயார் செய்து பருகுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 26, 2024

Hindustan Times
Tamil

காஃபின் இல்லாவிட்டாலும் காபி போன்ற ருசி கொண்ட பானமாக பேரிட்சை விதை காபி இருந்து வருகிறது. எனவே காபி குடிப்பது போன்ற உணர்வை தூண்டும்

பேரிட்சை விதையில் ஏராளமான ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், அழற்சிகளுக்கு எதிராக போராட உதவுகிறது

இதய ஆரோக்கியம், குடல் இயக்கத்தை மேம்படுத்துவது என பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பேரிட்சை விதையில் இருக்கின்றன

காஃபின் இல்லாவிட்டாலும் காபி குடிப்பது போன்ற உணர்வையும், சுவையையும் தரும் விதமாக பேரிட்ச்சை விதை காபி இருக்கிறது. தூக்கமின்மை, பதட்டம் போன்ற பிரச்னைகளை குறைக்கிறது

ஓலியிக் அமிலம், நார்ச்சத்து, பாலிபினால்கள் நிறைந்திருக்கும் பேரிட்சை விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

அழற்சிகளுக்கு எதிரான பண்புகள் பேரிட்சையில் இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்திருக்கும் நிலையில், நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது

பேரிட்சை விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை பேரிட்ச்சை விதைக்கு உள்ளது. எனவே ரத்த சர்க்கரை அளவை கடுக்குள் வைக்க உதவுகிறது

இயற்கையாகவே பற்களை வெள்ளையாகவும்,  பளபளப்பாகவும் வைக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்