மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளில் ஒன்றாக வேம்பு இலைகள் இருந்து வருகிறது. தினமும் காலையில் 10 முதல் 12 வேம்பு இலைகளை மெல்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என கூறப்படுகிறது
By Muthu Vinayagam Kosalairaman Mar 26, 2025
Hindustan Times Tamil
வேம்பு இலைகளில் A, B1, B2, B6, C, மற்றும் E போன்ற வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிரம்பியிருக்கிறது
முகப்பரு, தழும்புகள் போன்ற சரும பிரச்னை இருப்பவர்களுக்கு வேம்பு இலைகள் நிவாரணம் அளிக்கின்றன. வேப்பிலைகளை மென்று சாப்பிடுவது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான இரத்தம் சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாத்து இயற்கையான பளபளப்பை பெற உதவுகிறது
வேம்பு இலைகளில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை எதிர்த்து போராடவும், பிளேக் படிவதைக் குறைக்கவும், ஈறு நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன. இது ஒரு இயற்கையான டூத் ப்ரஷ் போல செயல்படுகிறது. நீண்ட கால புத்துணர்ச்சியை பெற உதவுகிறது
வேம்பு இலை சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலில் உணவை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
வேம்பில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பருவ கால நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. உடலில் தொற்றுகளை எதிர்த்துப் போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது
வேம்பு உங்கள் உடலுக்கு இயற்கையான நச்சுநீக்கி போல் செயல்படுகிறது, அதை உள்ளே இருந்து சுத்தப்படுத்த உதவுகிறது. வேம்பு இலைகளை மென்று சாப்பிடுவது உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவுகிறது
வேம்பு இலைகள் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது
கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?