கருப்பு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 06, 2024

Hindustan Times
Tamil

கேரட் என்றால் ஆரஞ்சு நிறத்தில் இருப்பது தான் எல்லோருக்கும் தெரியும். கருப்பு நிற கேரட் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கருப்பு கேரட்டை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஊட்டச்சத்துகளின் கலவை

உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளான வைட்டமின் ஏ,கே, பொட்டாசியம் மற்றும் ஆந்தோசைனின்ஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருப்பு கேரட்டில் நிறைந்திருக்கின்றன

செரிமானத்தை மேம்படுத்துகிறது

நார்ச்சத்து நிறைந்திருக்கும் கருப்பு கேரட் குடல் இயக்கத்தை ஏற்படுத்தி செரிமானத்துக்கு உதவி புரிவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிறு உப்புசம் ஆவதையும், வாயு தொல்லை ஏற்படாமலும் பார்த்து கொள்கிறது

கூர்மையான பார்வையை பெற உதவுகிறது

கருப்பு கேரட்டில் இருக்கும் பீட்டா கரோடீன் வைட்டமின் ஏ ஆக மாறி கண்களின் விழித்திரை ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

டயபிடிஸை நிர்வகிக்கிறது

குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட கருப்பு கேரட், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை வெகுவாக குறைக்கிறது. இதன் மூலம் டயபிடிஸ் பாதிப்பை நிர்வகிக்கிறது

வீக்கத்தை குறைக்கிறது

வீக்கங்கள், அழற்சிகளுக்கு எதிரான பண்புகள் கருப்பு கேரட்டில் அதிகமாக உள்ளது. இவை நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்கிறது

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்