’மேஷம் முதல் மீனம் வரை!’ யாரையும் அடக்கி ஆள வைக்கும் ஹர்ஷ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
By Kathiravan V Jun 22, 2024
Hindustan Times Tamil
அற்புதமான வாழ்கையை அமைத்து தரும் யோகமான ஹர்ஷ யோகத்தை தரும் கிரகங்களான பாவ கிரகங்கள் உள்ளன.
பாவ கிரகங்கள் அமரும் ஸ்தானத்திற்கு ஏற்ப ஒரு ஜாதகத்தில் உயர்நிலை புகழ் மற்றும் அந்தஸ்துகளை மிக குறுகிய காலத்தில் பாவக்கோள்களால் வழங்க முடியும்.
’ஹர்ஷம்’ என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் ஆகும்.
இயற்கை பாவிகள் என சொல்லக்கூடிய சனி, செவ்வாய், ராகு, கேது மற்றும் சூரியன் ஆகிய கிரங்களில் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ லக்னத்திற்கு 6ஆம் இடத்தில் இருக்க வேண்டும். 6ஆம் இடத்திற்கு உரிய கிரகம் 8 அல்லது 12ஆம் இடத்தில் இருந்தால் ஹர்ஷ யோகம் உண்டாகிறது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உடல் வலிமை, மன வலிமை, எதையும் எதிர்த்து போராடும் துணிச்சல், எதையும் துணிவுடன் எதிர்க்கும் தன்மை, போட்டிகளில் வெற்றி பெறும் அமைப்பு, அரசாங்க உயர் பதவிகள், அதிகாரம் மிக்கவர்கள் தொடர்பு, நீண்ட ஆயுள், சமயோஜித புத்தி ஆகிய நன்மைகளை ஹர்ஷ யோகம் மூலம் ஜாதகர் பெறுவார்.
உதாரணமாக தனுசு லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இவர்களின் 6ஆம் இடமான ரிஷபம் ராசியில் பாவ கிரகமான சனி பகவான் அமர்ந்து உள்ளார் என வைத்துக் கொள்வோம். ரிஷபம் ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் 8ஆம் இடமான கடகம் ராசியில் இருந்தால், ஹர்ஷ யோகம் உண்டாகும்.
இந்த ஜாதகருக்கு, சனி, சுக்கிரனின் தசை அல்லது புத்தி ஆகியவை நடைபெறும் காலங்களில் ஹர்ஷ யோகம் வேலை செய்யும்.
உங்க செல்லக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பது சரியா.. தவறா.. ஜோதிடர் விளக்கம்!