முடி உதிர்வு, இளநரை பிரச்சனையா.. உடனே போக்க உதவும் அத்திப்பழம் பேஸ்ட்! 

By Pandeeswari Gurusamy
Jun 06, 2024

Hindustan Times
Tamil

இளநரை, தலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கையான வழிகளில் ஒன்றாக இருப்பது அத்திப்பழம். இந்த பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்

pixa bay

இளநரை, தலை முடி உதிர்வு பலருக்கும் பெரும் தொல்லை தரும் விஷயமாகவே உள்ளது. அதிலும் இளவயதினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது. நரைமுடியை போக்க டை போன்ற சாயங்கள் பூச நேரிடுகிறது. இதன் தாக்கத்தால் தலைமுடி மேலும் வெளுப்பாவதுடன், வறட்சி அடைந்து வலுவிழக்கிறது

pixa bay

அத்திபழத்தை வைத்து உங்கள் தலைமுடியின் நிறத்தை கருப்பாக்கலாம். அதை பேஸ்டாக தலையில் தடவுவதால் நல்ல பலனை பெறலாம்

pixa bay

5 முதல் 6 அத்திபழத்தை எடுத்து, அதனுடன் ஒரு டிஸ்பூன் கற்றாழை ஜெல், 2 ஸ்பூன் வெந்தயம் விதைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்

pixa bay

அத்திபழத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். அதேபோல் வெந்தயத்தையும் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் மேற்கூறிய அனைத்தையும் கலந்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்டில் தயிர், கற்றாழை ஜெல் கலக்க வேண்டும்

pixa bay

மருதாணியை அரைத்து தலையில் தேய்ப்பது போல் இந்த கலவையை தலையில் தேய்க்க வேண்டும். தலைமுடிகளின் வேர்கள் படும் வரை தேய்க்க வேண்டும்.

pixa bay

சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, வெறும் நீரில் கழுவ வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் நரைமுடி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் முடியும் வலுப்பெற்று, அடர்த்தி அடையும்

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்