ஜப்பானியர்களின் சுறுசுறுப்புக்குக் காரணமான பழக்கவழக்கங்கள்!

By Marimuthu M
Nov 11, 2024

Hindustan Times
Tamil

ஜப்பானியர்கள் அலுவலகத்துக்கு நடந்து செல்வதும் மிதிவண்டியில் செல்வதும் அவர்களின் சுறுசுறுப்புக்குக் காரணம்.

 ஜப்பானியர்கள் உணவில் காய்கறிகள், மீன் போன்றவை கொண்ட சமச்சீர் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இது அவர்களின் சுறுசுறுப்புக்குக் காரணம். 

தற்காப்புக்கலைகளான ஜூடோ, கராத்தே, கெண்டோ ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதும் ஜப்பானியர்களின் சுறுசுறுப்புக்குக் காரணம். 

நேராக நிமிர்ந்து அமர்வது, கூன் விழாதவாறு நடப்பது ஆகியவை ஜப்பானியர்களின் சுறுசுறுப்புக்குக் காரணம்.

ஜப்பானியர்கள் சூடான நீரூற்றுகளில் அடிக்கடி குளிப்பதால், அது அவர்களது தசைகளை தளர்வு அடையச் செய்கிறது. சுறுசுறுப்புக்குக் காரணமாகிறது.

ஜப்பானியர்கள் ஆவியில் சமைத்த உணவுகளையே பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர். அவர்களது உணவில் எண்ணெய் பயன்பாடு குறைவு.

 ஜப்பானியர்கள் தங்கள் தோட்டத்தில் உடல் உழைப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்