கஜகேசரி யோகத்தால் யாருடைய காட்டில் பணம் மழை பாருங்க.. குரு பகவான் குறி தப்புமா!

Canva

By Pandeeswari Gurusamy
Apr 13, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரப்படி, சூரியன் தந்தை, சந்திரன் தாய். ஒன்பது கிரகங்களில் சந்திரன் மிக வேகமாகச் செல்லும் கிரகம். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை நாட்கள் ஆகும். சந்திரன் மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும் போது, சாதக, பாதக யோகங்கள் உருவாகும்

Canva

ஏப்ரல் 10 அன்று சந்திரன் கன்னி ராசியில் பிரவேசித்தது. குரு ரிஷப ராசியில் பயணிக்கிறார். சந்திரன் மற்றும் குருவின் நிலையைப் பொறுத்து கஜகேசரி யோகம் உருவாகிறது. 

Pixabay

12 ராசிகளையும் இது பாதித்தாலும், சில ராசிகளுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது. அந்த ராசிகள் யாவை என்பதைப் பார்ப்போம்.

Pixabay

ரிஷபம்: செல்வம், மகிழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்டகாலமாகக் காத்திருக்கும் ஆசைகள் நிறைவேறும். உங்கள் தொழில் வாழ்வில் பெரிய வெற்றியைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என கூறப்படுகிறது. 

Canva

கன்னி : கஜகேசரி யோகம் ஜோதிடப்படி நல்ல பலன்களைத் தரும். எல்லாப் பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அனைத்து ஆசைகளும் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

Canva

விருச்சிகம்: கஜகேசரி யோகம் வாழ்வில் மகிழ்ச்சிஅதிகரிக்கலாம். நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எண்ணிய பணிகள் வெற்றிகரமாக முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினர் இடையே மகிழ்ச்சி இருக்கும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரலாம் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும். 

Canva

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்