குரு சுக்கிரன் மூலம் உருவாகும் கஜலட்சுமி யோகத்தை பெற்ற ராசிகள் இவர்கள்தான்
Canva
By Suriyakumar Jayabalan May 08, 2025
Hindustan Times Tamil
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக சுக்கிர பகவான் விளங்கி வருகின்றார் இவர் ஜூன் மாதத்தில் மிதுன ராசிக்கு செல்கின்றார்.
Canva
அதே சமயம் அந்த நேரத்தில் மிதுன ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். ஒரே சமயம் மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர். இதனால் மங்கள யோகமான கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதுன ராசியில் இந்த கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது.
Canva
மிதுன ராசியில் இணையும் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் உருவாக்கும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இதனால் வாழ்க்கையில் அனைத்து வசதி மற்றும் ஆடம்பரங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11வது வீட்டில் குரு சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி யோகம் வருகின்றது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வேலைகள் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
மே 24ம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.