குரு பகவான் மிதுன ராசி பயணத்தால் பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
May 07, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் செய்யும் இடமாற்றத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். 

Canva

அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

இந்நிலையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் இடமாறுகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல சாதனைகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பழங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிலையை ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. 

Canva

துலாம் ராசி: குரு பகவானின் சாதகமான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பல மடங்கு யோகங்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்தையும் விரும்பக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கை மாறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.