குரு பகவானின் ஆசிர்வாதத்தால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 10, 2025
Hindustan Times Tamil
நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மேஷம் முதல் மீண்டும் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை செல்லும் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர அலுவலர்களின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
மிதுன ராசி: உங்கள் ராசிக்கு பல சாதகமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. ஆனால் பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!