நரைமுடி கருப்பாக செய்ய வேண்டியவை!

By Marimuthu M
Apr 20, 2024

Hindustan Times
Tamil

 வெள்ளை முடியை கருப்பாக்க தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலைமுடியில் தடவ வெள்ளைமுடி கருப்பாக மாறும்.

வெள்ளை முடியினை கருப்பாக்க, தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்தபின், மருதாணி மற்றும் சிகைக்காய் பொடி கலந்து தலைமுடியில் அலசவும்.

பாதாமை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ, முடி நரைப்பதைத் தடுக்கும்.

காளானில் இருக்கும் தாமிரம், மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும். இது முடியை நரைக்க விடாது. 

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி, நீர் சேர்க்காமல் அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கூந்தலில் தடவி காய வைக்கவேண்டும். பின் குளிக்கவேண்டும். இதைத் தொடர்ச்சியாக செய்துவர இப்பிரச்னை நீங்கும்.

அவுரி பொடி மற்றும் மருதாணிப் பொடியை நீரில் கலந்து முடியில் தடவி ஊறவைத்து பின் குளிக்க முடியின் நிறம் மாறும். இதனை 3 முறை செய்யவேண்டும். 

தினமும் 2 டீஸ்பூன் கருவேப்பிலை பொடியையும் உணவில் சேர்த்து வாருங்கள். கூந்தல் கருமை மாறும். 

உருளைக்கிழங்கின் நன்மைகள்