தன்னுடய அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தான் இசையமைத்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் சரவணன் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. (Photo credit: wikipedia)

By Kalyani Pandiyan S
Apr 15, 2025

Hindustan Times
Tamil

இந்த நோட்டீஸ் குறித்து  இளையராஜா வழக்கறிஞர் சரவணன் பேசும் போது, குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் அவரது அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கான ராயல்டி தொகையையும் அவருக்கு வழங்கப்படவில்லை.  (Photo Credit indian times) 

இளையராஜாவிற்கு இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நமது ஊரில் காப்புரிமை தொடர்பான புரிதல் யாருக்குமே இல்லை. 

பாடல்களை பயன்படுத்துவது மட்டுமல்ல. நம்முடைய காப்புரிமை சட்டம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. 

அது என்னவென்றால், ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடலை மற்றொரு இடத்தில் பயன்படுத்தும் போது, அதனை கேலி செய்யும் வகையிலோ அல்லது சிதைக்கும் வகையிலோ உபயோகிக்கக்கூடாது. 

ஆனால், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் சிதைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த விவகாரத்தில் இளையராஜா கேள்வி எழுப்புவதற்கு முழு உரிமை இருக்கிறது.’ என்று பேசினார்.

ஆகையால், படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 

நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என்று பேசினார்.

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்