முத்தம் முதல் பார்பி ஒய்யார உடை வரை! கோல்டன் குளோப் விருது விழா சுவாரஸ்யங்கள்!

By Kathiravan V
Jan 08, 2024

Hindustan Times
Tamil

81வது கோல்டன் குளோப்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வு கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த அண்டும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மறக்கமுடியாத தருணங்கள் இருந்தன.

பார்பி நட்சத்திரம் மார்கோட் ராபி  தனது அடையாளமான துடிப்பான பிக்ங் நிற உடையில் அசத்தினார். 

சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வாரிசு நடிகர்களுக்கு வழங்கியதால், சூட்ஸ் நடிகர்கள் மீண்டும் ஒன்றிணைந்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது முதல் கோல்டன் குளோப் விருதினை ஓப்பன்ஹைமர் படத்திற்காக பெற்றார்.  

"உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் எனது குழந்தைகளின் தந்தையும் எனது சிறந்த நண்பருமான ஜஸ்டினுக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களால் தான் நான் ஒரு வேலை செய்யும் தாயாக இருக்க முடிந்தது," என்று அலி வோங் தெரிவித்தார்

இந்த நிகழ்வுகளுக்கு இடையே கைலி ஜென்னர் - திமோதி சாலமேட்டும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வலைத்தங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மோஷன் பிக்சரில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் பழங்குடிப் பெண் என்ற பெருமையை லில்லி படைத்தார் 

 நயன்தாராவின் புகைப்படங்கள்!