தங்கம் விலை நிலவரம்: ’67 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

By Kathiravan V
Mar 20, 2025

Hindustan Times
Tamil

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.66,480 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.8,310க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 19) ஒரு சவரன் ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை இன்று (மார்ச் 20) ஒரு கிராம் ரூ.114.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.114,000-க்கும் விற்பனை ஆகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

தங்கம் வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும்.

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?