மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
By Kathiravan V Feb 13, 2025
Hindustan Times Tamil
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (பிப்ரவரி 13) ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.7,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று (பிப்ரவரி 12) ஒரு சவரன் ரூ.63,520 விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,940 விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இன்று (பிப்ரவரி 13) ஒரு கிராம்ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.107,000க்கும் விற்பனை ஆகிறது.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன