செல்வராகவன் காதல் குறித்து கீதாஞ்சலி செல்வராகவன் பேட்டி! ஒரு உறவில் இருக்கும் இருவருக்குள், ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் பொழுது, அந்த உறவை மீண்டும் கை கொள்ள, இருவரும் முதலில் உட்கார்ந்து, மனதில் உள்ளதை ஓப்பனாக பேச வேண்டும்.

By Kalyani Pandiyan S
May 14, 2024

Hindustan Times
Tamil

செக்ஸ் கரைந்து விடும் காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருவருக்குள்ளும் ஒரு விதமான ஸ்பார்க் இருக்கும். காலப்போக்கில் அந்த ஸ்பார்க், மேஜிக் உள்ளிட்டவையெல்லாம் அப்படியே கரைந்து விடும். 

ஒரு கட்டத்தில் நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதே, உங்களுடைய உடம்பின் தேவைக்காக மட்டுமானதாக மாறிவிடும். ஆனால், உங்களுக்குள் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்தால் மீண்டும் அந்த ஸ்பார்க்கை கொண்டு வந்து விட முடியும்.  

நான் செல்வராகவன் வாழ்க்கையில் வந்த பின்னர், அவர் நிறைய மாறி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர் அவருக்காக உழைத்தார். அதற்கு நான் துணையாக இருந்தேன் அவ்வளவுதான். அதேபோல நானும் என்னுடைய கஷ்டகாலத்தில் போராடிக்கொண்டிருக்கும் போது, அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். 

நாங்கள் கல்யாணம் முடிந்த ஆரம்ப கட்டத்திலேயே நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டோம். என்னுடைய மனம் மற்றும் உடல்நல பாதிப்பு, அவருடைய மனம் மற்றும் உடல்நல பாதிப்பு, இது தவிர பொருளாதார நெருக்கடிகள், வேலை நிமித்தமான பிரச்சினைகள் என நிறைய பார்த்தாயிற்று. இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அப்போது பார்க்காத பிரச்சனைகளா என்ற எண்ணம் தான் எங்களுக்குள் வருகிறது.

அந்த மாதிரியான நெருக்கடியான காலகட்டங்களில் நீங்கள் உங்களுடைய பார்ட்னரை நம்ப வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். ஒருவருக்கு பிரச்சினை வரும் பொழுது, இன்னொருவர் பக்க பலமாக நின்று, அதிலிருந்து அவர்கள் வெளியே வருவதற்கு உதவினோம்.” என்று பேசினார்

அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!

image credit to unsplash