நெய், வெண்ணெய் ஆகியவற்றில் எது சிறந்தது, ஆரோக்கியமானது எது என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 15, 2024

Hindustan Times
Tamil

நெய், வெண்ணெய் என இரண்டிலும் கொழுப்பு சத்து நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துகளை பொறுத்தவரை இவை இரண்டும் மாறுபட்டு உள்ளது

நெய் என்பது வெண்ணெய்யை தெளிவுபடுத்துவதால் கிடைக்கும் பொருளாக உள்ளது. பால் கட்டிகளில் இருந்து நீர்ச்சத்துகளை நீக்குவதன் மூலம் நெய் கிடைக்கிறது. சுவை மிக்கதாகவும், லாக்டோஸ் இல்லாமலும் சமைலுக்கு உகந்த கொழுப்பு சத்தை கொண்டதாக உள்ளது

வெண்ணெய் என்பது பாலில் இருந்து கிடைக்கும் உபரி பொருளாகும். திடமான சுவை மிகுந்ததாக இருக்கும் வெண்ணெய் சமையலில் பேக்கிங் செய்ய பயன்படுகிறது. குறிப்பாக டோஸ்ட் வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது

நெய்யில் கொழுப்பு மற்றும் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ,டி,ஈ மற்றும் கே உள்ளது. ஆரோக்கிய கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வெண்ணெய்யில் அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்புகள் வைட்டமின் ஏ,டி,ஈ, கே2 உள்ளன

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் 130 கலோரிகளும், 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யில் 100 கலோரிகளும் இடம்பிடித்துள்ளன

லாக்டோஸ் இல்லாமல் இருப்பதால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை, பால் சார்ந்த பொருள்கள் அலர்ஜி இருப்பவர்களுக்கு உகந்ததாக உள்ளது. வெண்ணெய் பாலில் இருந்து தயார் செய்யப்படுவதால் குறைவான அளவில் லாக்டோஸ் இடம்பிடித்திருக்கும்

பாரம்பரியமான இந்திய உணவுகளில் நெய் தவாறமல் இடம்பிடிக்கும் பொருளாக உள்ளது. மிருதுவான், க்ரீம் போன்ற தோற்றத்தில் இருக்கும் வெண்ணெய் இனிப்பு சுவையுடன் பேக்கிங் செய்வதற்கு உகந்ததாக இருக்கும்

வறுக்க, தாளிக்க, உணவுகளில் நேரடியாக சேர்க்க என நெய் பயன்பாடு பன்முகத்தன்மையை கொண்டதாக உள்ளது. வெண்ணெய்யை பொறுத்தவரை குறைவான வெப்பநிலை உணவுகளுக்கு உகந்ததாக இருக்கும்

பேக்கிங் சார்ந்த உணவுகளுக்கு வெண்ணெய் சிறந்த தேர்வாகவும், அதிக சூட்டில் தயார் செய்யக்கூடிய உணவுக்கு நெய் சிறந்த தேர்வாகவும் இருக்கும்  

பாலுக்கு மாற்றாக பருகக்கூடிய ஆரோக்கியம் மிக்க மூலிகை டீ எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்