பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 12, 2025

Hindustan Times
Tamil

உடலுக்கு பல்வேறு வைட்டமின்களை வழங்குவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை ஜூஸாக பருகனாலும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கும். ஆனால் அளவில் மாறுபாடு இருக்கும்

பழ ஜூஸ்கள் பொதுவாக அதிகப்படியான கலோரிகளை கொண்டுள்ளது. அதே சமயம் பழங்களை நேரடியாக சாப்பிட்டால் கலோரிகள் அளவு குறைவாக இருக்கும

பழங்களை நேரடியாக சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்கும். பழங்களின் சக்கை மற்றும் அதன் தோல்களிலும் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து செரிமானத்துக்கு நல்லது. ஆனால் ஜூஸாக பருகினால் நார்ச்சத்து கிடைக்காது

பழ ஜூஸ்களில் இருக்கும் சர்க்கரை அளவு பற்களின் எனாமலை சேதமாக்கும். அது பழங்களை நேரடியாக சாப்பிட்டால் அந்த பிரச்னை கிடையாது. அத்துடன் எச்சில் உற்பத்தியை அதிகரித்து வாய்வழி சுகாதாரத்தை பேனலாம்

பழங்கள் நேரடியாக சாப்பிட்டால் ஊட்டச்சத்துகள், தாதுக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது. ஜூஸாக தயார் செய்தாலே ஊட்டச்சத்துகளின் அளவு கணிசமாக குறைந்துவிடும்

பழங்களில் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இது சர்க்கரை உறிஞ்சுதலை குறைத்துவிடும். ஆனால் பழ ஜூஸ் பருகினால் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கலாம்

பழங்கள் மற்றும் ஜூஸ்கள் ஆகிய இரண்டும் ஆரோக்கியமானவை என்றாலும் ஜூஸாக சாப்பிடுவதை காட்டிலும் பழமாக சாப்பிட்டால் நன்மையை முழுமையாக பெறலாம்

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடக் கூடாதா? சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? அதை எப்படி எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது!

Pixabay