தலைமுடி உதிர்வு பாதிப்பு இருப்பவர்கள், மீண்டும் அடர்த்தியாக முடி வளர்வதற்கு இந்த பழங்களை உங்களது டயட்டில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். நல்ல பலனை பெறுவீர்கள்
By Muthu Vinayagam Kosalairaman Jul 25, 2024
Hindustan Times Tamil
பழங்களில் இருக்கும் வளமையான வைட்டமின்கள், தாதுக்கள் தலைமுடி வளர்ச்சியை உதிர்வுக்கு பின்னரும் ஊக்குவிக்கிறது
உதிர்வுக்கு பின் மீண்டும் தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் பழங்கள் எவை என்பதை பார்க்கலாம்
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, கிரேப் ப்ரூட், ஆரஞ்சு போன்ற பவங்களில் சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை அடரத்தியாக தலைமுடி வளர்வதை ஊக்குவிக்கிறது
பெர்ரி
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை தலை முடி வேர் பகுதியில் இருக்கும் நுண் குமிளிகள் ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படுவதை தடுத்து, தலைமுடி மீண்டும் வளர ஆதரவு அளிக்கிறது
அவகோடா
இதில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் ஈ, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தலைமுடி அடர்த்தியாக வளர உதவி புரிகிறது
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஏராளமான அளவில் பொட்டாசியம், வைட்டமின்கள், இயற்கை எண்ணெய்கள் நிரம்பியுள்ளன. இவை தலைமுடி வேர்களை வலுப்படுத்தி, முடிகள் உடைவதை தடுக்கிறது. அத்துடன் அடர்த்தியாக தலைமுடி மீண்டும் வளர உதவுகிறது
பப்பாளி
வைட்டமின் ஏ,சி,ஈ நிறைந்திருக்கும் பப்பாளி பழத்தில் இருக்கும் நொதிகள் தலைமுடி மறுவளர்ச்சிக்கு உதவுகிறது
மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட பாஸிட்டிவ் ஆக இருப்பது எப்படி?