வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும் பழ ஜூஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 22, 2024
Hindustan Times Tamil
சில பழ ஜூஸ்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்புகளை எளிதாக கரைத்து எடையிழப்புக்கு உதவுகிறது
வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைக்கும் வேலையையும் பழ ஜூஸ்கள் செய்கிறது
ப்ரோ மெளலின் இடம்பிடித்திருக்கும் பைனாப்பிள் ஜூஸ் செரிமானத்துக்கு உதவுவதுடன், வீக்கத்தை குறைக்கிறது. இதன் மூலம் மறைமுகமாக எடை குறைப்புக்கு ஆதரவு அளிக்கிறது
நீரேற்ற தன்மை, குறைவான கலோரிகள், அதிகப்படியான அமினோ அமிலங்கள் காரணமாக தர்ப்பூசணி ஜூஸ் கொழுப்புகளை எரிக்க உதவுகிறது
அதிகப்படியான வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் எலுமிச்சை ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் நிறைந்திருக்கும் மாதுளை ஜூஸ் வீக்கத்தை குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
கிரேப் ஃப்ரூட் ஜூஸ் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி கொழுப்பு கரைவதற்கு ஆதரவு அளிக்கிறது