கசப்பு சுவையுடன் இருக்கும் பாகற்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதுடன், அவை உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகைகளில் நன்மையை தருகின்றன
image credit to unsplash
By Muthu Vinayagam Kosalairaman Jun 23, 2025
Hindustan Times Tamil
காய்கறிகளில் சத்து மிக்கதாகவும், கசப்பான சுவையுடன் இருக்ககூடிய காய்கறியாகவும் பாகற்காய் இருந்து வருகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாக உள்ளது
image credit to unsplash
பாகற்காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கவும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன
image credit to unsplash
பாகற்காயில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற பிற முக்கிய தாதுக்களும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பயனுள்ளதாக இருக்கும்
image credit to unsplash
பாகற்காயில் இடம்பிடித்திருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் ஏ, சி, துத்தநாகம் மற்றும் பயோட்டின் ஆகியவை சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன
image credit to unsplash
பாகற்காயில் கலோரிகள் மிக குறைவாக உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எடை இழக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்
image credit to unsplash
பாகற்காய்களில் உள்ள கசப்பு சுவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன
image credit to unsplash
பாகற்காயில் உள்ள பாலிபெப்டைட்-பி எனப்படும் இன்சுலின் போன்ற சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
image credit to unsplash
டாக்சிகளில் பயணிக்கும் பெண்கள். இந்த பாதுகாப்பு குறிப்புகளை மறந்துவிடாதீர்கள்!