புகைபிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மிகக் கடுமையாக பாதிக்கிறது. 

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 25, 2024

Hindustan Times
Tamil

புகைபிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மிகக் கடுமையாக பாதிக்கிறது. 

pixa bay

அதிக புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக புகைப்பிடிப்பவர்களின் பாலியல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

pixa bay

கணவன்-மனைவி மகிழ்ச்சியாக இருக்க, அவர்களுக்கிடையேயான பாலுறவு சீராக நடக்க வேண்டும். அவர்களுக்கிடையேயான பாலியல் உறவு பாதிக்கப்படும்போதெல்லாம், அவர்களின் பிணைப்பும் பலவீனமடைகிறது. புகைபிடிப்பவர்களில் பாலியல் செயல்திறன், ஆண்மை மற்றும் கருவுறுதல் ஆகியவை குறைக்கப்படுகின்றன. 

pixa bay

சிகரெட் புகையில் அம்மோனியா, கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சயனைடு போன்ற இரசாயனங்கள் உள்ளன. இவை உடலினுள் சென்று பாலியல் பிரச்சனைகளை உண்டாக்கும்.

pixa bay

உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், நீங்கள் நிச்சயமாக புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும். புகைபிடித்தல் பாலியல் ஆரோக்கியத்தில் என்ன எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும்.

pixa bay

அதிக அளவில் புகைபிடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத் திறன் குறைபாடு இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகரெட்டில் உள்ள நிகோடின் ஆணுறுப்புக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. 

pixa bay

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, புகைபிடித்தல் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் மார்பகங்களின் ஆரோக்கியம் பலவீனமடைகிறது. குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்கள் கண்டிப்பாக புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

pixa bay

புகைபிடிக்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த வயதை விட முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படலாம். இது முன்கூட்டிய மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. புகைபிடிக்காத பெண்களை விட புகைபிடிக்கும் பெண்களுக்கு 50 வயதிற்கு முன்பே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

pixa bay

நிறைய தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பதால், சிகரெட் பிடிக்கும் ஆசை குறைகிறது. மேலும் உங்கள் வீட்டில் உள்ள சிகரெட், லைட்டர் மற்றும் சாம்பல் தட்டுகளை கண்ணுக்கு தெரியாமல் அப்புறப்படுத்தி விடுங்கள். அவற்றைப் பார்த்தாலும் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம்.

pixa bay

சிறுதானியப் பால் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள்