சருமத்தில் எண்ணெய் பிசுக்கு, பருக்கள் ஏற்படுவதை தடுக்க உதவும் உணவு வகைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 23, 2024

Hindustan Times
Tamil

சருமம் எண்ணெய் பிசுக்காக இருந்தால் பருக்கள் ஏற்படும். இதை தடுக்க நீங்கள் கடைப்பிடிக்கும் டயட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சருமத்தில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை நிர்வகிப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை நீக்குகிறது

வெள்ளரி

அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் வெள்ளரி நச்சுக்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. சருமத்தை நீரேற்றுடன் வைக்க உதவுகிறது. அதேபோல் எண்ணெய் தேங்குவதை தடுக்கிறது

ப்ரோக்கோலி

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்திருக்கும் ப்ரோக்கோலி எண்ணெய் உற்பத்தியை தடுக்க உதவுகிறது

டார்க் சாக்லெட்

ப்ளேவணாய்டுகள், துத்தநாகம், மெக்னீசியம், செம்பு ஆகியவை நிறைந்திருக்கும் டார்க் சாக்லெட் பருக்களால் ஏற்படும் அழற்சியை தடுத்து, அதிகப்படியான எண்ணெய்யை கட்டுப்படுத்துகிறது

பருப்பு வகைகள்

அதிகப்படியான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் பருப்பு வகைகள் செபம் உற்பத்தியை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் தெளிவான சருமத்தை பெறலாம்

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்