உடல் எடை குறைப்பை துரிதப்படுத்த இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 29, 2024

Hindustan Times
Tamil

உங்கள் உடல் எடையை பராமரிப்பதில் இரவு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இரவில் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறைப்பை உறுதிபடுத்தலாம்

அரிசி

அரிசி உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. இவை உங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஸ்டார்ட் மற்றும் கார்ப்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்யும்

ப்ரை உணவுகள்

இரவு நேரத்தில் ப்ரை செய்யப்பட்ட உணவுகள் சாப்பிட்டால் கொழுப்பு திரட்சியை ஊக்குவிக்கும். அதேபோல் ப்ரை உணவுகளில் கலோரிகளும் அதிகமாக இருக்கும் என்பதால் எடை அதிகரிப்பதோடு, இதய நோய் பாதிப்பும் ஏற்படும்

கூடுதல் சர்க்கரையுடன் கூடிய உணவுகள்

அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகள் இதய நோய், உடல் பருமன், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புக்கு வழி வகுக்கலாம். எனவே இரவில் பாஸ்தரி, கேக், ஐஸ்க்ரீம், இனிப்பு போன்றவற்றை தவிர்க்கவும்

பால் சார்ந்த பொருள்கள்

பால் சார்ந்த பொருள்களான காட்டேஜ் சீஸ், சீஸ் பட்டர், யோகர்ட், பால் போன்றவற்றில் அதிக அளவில் லேக்டோஸ் மற்றும் இயற்கையான சர்க்கரை அளவு எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம்

ரிபைன்ட் பிரட்கள்

ரிபைன் செய்யப்பட்ட கோதுமையில் தயார் செய்யப்படும் பிரட்கள் அதிக கலோரிகள் மற்றும் கார்ப்போஹைட்ரேட்கள் கொண்டவையாக இருக்கும். அத்துடன் அடிப்படை ஊட்டச்சத்துகளான நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் குறைவாகவே இருக்கும்

செக்ஸ் வாழ்க்கைக்கு உதவும் புரோக்கோலி