நரைமுடியைக் குறைக்கும் உணவுகள்

By Marimuthu M
Aug 20, 2024

Hindustan Times
Tamil

நமது தலைமுடி வளர்ச்சிக்கு பி12 வைட்டமின் உதவும். வைட்டமின் பி12 உள்ள மீனை எடுத்துக்கொள்வது நரைமுடியைக் குறைக்க உதவும்

 நரைமுடியைக் குறைக்க பி12 நிறைந்த பால் மற்றும் பாலடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்

நரைமுடியைக் குறைக்க காப்பர் சத்து நிறைந்த சுண்டல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளு, முந்திரி ஆகியவை முக்கியமானது 

நரைமுடியைக் குறைக்க துத்தநாக சத்து முக்கியம். பாதாம், சிறுதானியங்கள், முட்டை போன்ற துத்தநாக உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது

முடி உதிர்தலைத் தடுத்து, முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழுப்பு அரிசி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்

அவகோடாவில் இருக்கும் வைட்டமின் ஈ, புற ஊதாக்கதிர் பாதிப்பை நீக்கி நரைமுடியைக் குறைக்கும்

முடியை கருமையாக்கும் மெலனின் அதிகம் கொண்ட பீட்டோ கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் கேரட்டை எடுத்துக்கொள்வது நல்லது

தினமும் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னெவல்லாம் என்பதை பார்க்கலாம்