முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்

By Marimuthu M
Jul 16, 2024

Hindustan Times
Tamil

முட்டையில் இருக்கும் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா ஆகியவை இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

பீன்ஸில் நார்ச்சத்து, வைட்டமின் பி, சி, துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பது முடி உதிர்வதைத் தடுக்கும்

பசலைக்கீரையில் இருக்கும் இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ஒமேகா 3 ஆகியவை தலைமுடிக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன

ஓட்ஸில் இருக்கும் வைட்டமின் பி, தாது உப்புக்கள் முடிக்கு நிறமளிக்கின்றன. இதில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் முடி உதிர்தலைத் தடுக்கின்றன

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் புரதம், தாமிரம், இரும்புச்சத்து முடி கொட்டுவதைத் தடுக்க உதவுகின்றன

சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் முடி இழப்பைத் தடுக்க உதவுகின்றன

பாதாம் போன்ற நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸில் புரதம், இரும்புச்சத்து, பயோட்டின் ஆகியவை உள்ளன. இவை முடி உதிர்தலை நிறுத்துகின்றன

செம டேஸ்டான கிரிஸ்பி பச்சை பட்டாணி வடை.. ரெம்ப ஈசியா செய்யலாம்.. ட்ரை பண்ணுங்க!