பொடு உருவாவதை கட்டுப்படுத்தி தலை முடி ஆரோக்கியத்தை பெற உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 08, 2024
Hindustan Times Tamil
பொடுகு தொல்லை பலருக்கும் பொதுவான பிரச்னையாக இருப்பதுடன், மயிர்கால்களை பிசுபிசுப்பாக்குகிறது. நாம் சாப்பிடும் சில உணவுகள் தலை முடி ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
அவகோடா
உடலுக்கு தேவையான அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் நிறைந்திருக்கும் அவகோடா பொடுகுகளை குறைக்க உதவுகிறது. அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் மயிர்கால்கள் புத்துயிர் பெற உதவுகிறது
நட்ஸ்
பாதாம், வால்நட் போன்ற நட் வகைகளில் துத்தநாகம், ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இவை பொடுகை குறைத்து தலைமுடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது
யோகர்ட்
பயோடீன் அதிகமாக இருக்கும் யோகர்டில் அழற்சி, பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. இவை பொடுகு உருவாகுவதை தடுப்பதுடன், தலை முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது
பூசணி விதைகள்
துத்தநாகம் நிறைந்திருக்கும் பூசணி விதைகளில் வேர்களில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பொடுகுகளையும் குறைக்கிறது
சீஸ்
ப்ரோ பயோடிக்ஸ் நிறைந்திருக்கும் சீஸ், பொடுகை உருவாக்கும் பூஞ்சை தொற்றுக்கு எதிராக போராடுகிறது. நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
அவகேடோவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் இது எடை இழப்புக்கு உதவும், வயிற்றை நிரப்பி, பசியைக் குறைக்கவும் உதவும்