மூட்டு வலிக்குத் தீர்வு காண உதவும் உணவுகள்

By Marimuthu M
Apr 15, 2024

Hindustan Times
Tamil

உடல் பருமன், மூட்டில் அதிக அழுத்தம் ஆகியவை மூட்டு வலிக்குக் காரணங்களாக அமைகின்றன.

முழங்கால் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற துளசி மற்றும் புதினாவை நீரில் சேர்த்து சூடாக்கி குடித்து வரலாம்

இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்ப்பது மூட்டுவலியின் வீரியத்தைக் குறைக்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள், மீன்கள் ஆகியவற்றை உண்பது, உடலில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலத்தின் பலன்களைக் கொடுக்கும்

தினமும் பாதாம், ஆளி விதை, வால்நட் ஆகியவற்றை தினமும் உட்கொள்ள இந்த நட்ஸ்களில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலியைத் தீர்க்க உதவுகின்றன. 

வெந்தயத்தை அரைத்து பொடியாக்கி, தினமும் அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் நீரில் கலந்து குடித்து வர, மூட்டு வலி சரியாகும்

மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க மாலை நேரம் சூரிய ஒளியில் உலாவுங்கள். இது வைட்டமின் டியை உருவாக்கும்

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!