உங்கள் பெருங்குடல் பிரச்னைகளுக்கு குட்பை சொல்ல உதவும் உணவுகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy Jan 10, 2024
Hindustan Times Tamil
குடலில் சுகாதார கேடு ஏற்பட்டால் பாக்டீரியாக்கள் வளர்ச்சி, சமநிலையின்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்கள் பெருங்குடலில் உள்ள தசை சிதைந்து, இரைப்பை சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம். இதனால் குமட்டல் அடிக்கடி ஏற்படும்.
pixa bay
பெருங்குடலை இயற்கையாகவே சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்வாக அமையும் உணவுகள் இதோ
இஞ்சி: ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த இஞ்சி, நொதித்தல், மலச்சிக்கல், இதர வயிறு சார்ந்த பிரச்னைகள் குறைக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்று வலி, அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் எடை குறைப்பு வழிவகுத்து, கொலஸ்ட்ரால் அளவை கடட்டுப்படுத்துகிறது. குமட்டலை ஏற்படுவதையும் குறைக்கிறது.
pixa bay
ஆப்பிள்: பெக்டின் அதிகமாக நிறைந்திருக்கும் ஆப்பிள், இயற்கையான மலமளிக்கியாவும், ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். நார்ச்சத்து அதிகமாக காணப்படும் ஆப்பிள் செரிமானத்துக்கு நன்மை தருவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
pixa bay
சியா விதைகள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள் குடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த உணவாக உள்ளது. குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரிய வளர்ச்சியை தடுத்து, நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் குடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது
pixa bay
ஓட்ஸ்: ஒவ்வொரு முறை ஓட்ஸ் சாப்பிடும்போது, உடலுக்கு போதுமான அளவு நார்ச்சத்து கிடைக்கிறது. பெருங்குடலுக்கு நன்மை தரும் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. ஓட்ஸ் உணவுகள் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கிறது.
pixa bay
பச்சை காய்கறிகள்: குறைவான மெக்னீசியம் அளவு கொண்ட உணவுகளினால் வயிற்று பிரச்னைகள், குடலில் எரிச்சல் உணர்வு ஏற்படும். பச்சை காய்கறிகள் உங்கள் குடலை ஆற்றுப்படுத்தி, ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கு வழி வகுக்கிறது. இதில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் பெருங்குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது