தயிர் குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இதில் உள்ள அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமான நொதிகளைத் தூண்டுகிறது.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
கீரை, கோஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
புதினா, வாயு போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. இதனை உட்கொள்வதால் குமட்டல் குறைவது மட்டுமின்றி செரிமானமும் எளிதாகும்.
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை சீராக்கவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
டெங்கு காய்ச்சலில் இருந்து உடனடியாக குணமடைய சாப்பிட வேண்டிய உணவுகள்