குளிர் காலத்தில் விட்டமின் சி நிறைந்த உணவுகள் அவசியம்.. ஏன் தெரியுமா!

By Pandeeswari Gurusamy
Dec 16, 2024

Hindustan Times
Tamil

குளிர் காலத்தில் தொற்றுநோய்களின் ஆபத்து அதிகம் இருக்கும். இந்த கால கட்டத்தில் விட்டமின் சி அதிகம் எடுத்து கொள்வது பல வழிகளில் பலன் தரும்.

விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் பலப்படுத்தும் செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்பு உள்ளிட்ட பல சத்துக்களை உடல் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தும்.

குளிர் காலத்தில் சளி, இருமல் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. 

விட்டமின் சி உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது இதயத்தின் அழுத்தத்தை குறைக்கும்.

சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை தீர்க்க உதவும். விட்டமின் சி முக வறட்சி மற்றும் சுருக்கங்களை தவிர்க்கும்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது. ஸ்ட்ராபெர்ரி, கிவி மற்றும் கொய்யா போன்ற பழங்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது. 

சர்க்கரை வள்ளி கிழங்கு, காலிஃபிளவர், ப்ரோக்கோலி, தக்காளி, கேப்சிகம், போன்ற காய்கறிகளில் விட்டமின் சி அதிகம் உள்ளது. 

கீரைகளிலும் விட்டமின் சி  அதிகம் உள்ளது.

All photos: Pexels

டிரம்ப் பதவியேற்பு: கவனத்தை ஈர்த்த 8 முக்கிய விருந்தினர்கள்

Photo Credit: Reuters