உடலில் அதிகரித்து இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 24, 2024

Hindustan Times
Tamil

உடல் கொலஸ்ட்ரால் அளவை கல்லீரல் கட்டுப்படுத்துகிறது. குடும்ப பின்னணி, புகைப்பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, தீவிர மதுபழக்கம் போன்ற காரணிகளால் உடல் கொல்ஸ்ட்ரால் அளவானது அதிகரிக்கிறது

இதய நோய் பாதிப்பை அபாயத்தை வெலிப்படுத்தும் தகவலை தருவதாக உடலின் கொலஸ்ட்ரால் அளவு உள்ளது. அதிக அளவு கொல்ஸ்ட்ரால் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

ஒற்றை நிறைவுறா கொழுப்புகள், எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, எச்டிஎல் கொல்ஸ்ரால் அளவை அதிகரிக்கிறது.  மத்தியதரைக்கடல் டயட்களை உடலுக்கு தேவையான எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு உள்ளது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது

இருதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், பாலி ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த மீன்கள், மீன் சார்ந்த சப்ளிமெண்ட்களில் இவை கிடைக்கின்றன

டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகளால் எல்டிஎல் அளவை அதிகரித்து ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவும் உயருகிறது. இதனால் உடலுக்கு நன்மை தரும் எச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவானது குறைகிறது

கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். முழு தானியங்கள் கரையக்கூடிய தன்மை கொண்டிருப்பதுடன் எல்டிஎல் அளவை குறைக்கவும் உதவுகிறது

நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் பிட்னஸாக இருப்பதுடன், பருமன் ஆவதும் தடுக்கப்படுகிறது. அதேபோல் எல்டிஎல் அளவை குறைத்து எச்டிஎல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது

டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்