இயற்கையான முறையில் வயிறு உப்புசத்தை குறைப்பதற்கான வழிகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 11, 2024

Hindustan Times
Tamil

வயிறு உப்புசம் காரணமாக அமித்தன்மை, வாயு போன்ற பொதுவான செரிமான பிரச்னை ஏற்படுகிறது. இதன் விளைவாக் வழி மற்றும் அசெளகரியம் ஏற்படுகிறது

ஒரு ட்ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் அதை வெறும் வயிற்றில் குடித்தால் வயிறு உப்புசமானது குறையும். சீரகம் செரிமான நொதிகளை தூண்டுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தி வாயு பிரச்னையை போக்க உதவுகிறது. இதன் விளைவாக குடல் இயக்கத்தை சீராக்குகிறது

பப்பாளியில் இடம்பிடித்திருக்கும் பப்பெய்ன் என்கிற நொதிகள் புரதத்தை உடைத்து, வயிறு உப்பசத்தை குறைத்து செரிமானத்தை சீராக்குகிறது. பப்பாளியை அப்படியே அல்லது ஜூஸ் ஆக சாப்பிடுவதால் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கித்துக்கும் ஆதரவு அளிக்கிறது

புதினாவில் இருக்கும் இனிமை தன்மையான விளைவு செரிமான பாதை தசைகளை ரிலாக்ஸ் செய்து, வயிறு உப்புசத்தை குறைக்கிறது. எனவே புதினா டீ அல்லது புதினா இலைகளை மென்று சாப்பிடுவதால் வாயு பிரச்னை நீங்குவதோடு, செரிமான அமைப்பும் சீராக செயல்படும்

குடலில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு அடிப்படை தேவையாக புரோபையடிக்குகள் இருக்கின்றன. இதன் நன்மை தரும் பாக்டீரியாவாகவும், சீரான  செரிமானத்துக்கு அடிப்படையாகவும் உள்ளது. எனவே புரோபையடிக்குகள் நிறைந்த யோகர்ட், தயிர், ளித்த காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் வயிறு உப்புசம் ஆவதை கட்டுப்படுத்தலாம்

அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் இஞ்சி செரிமான பாதை தசைகளுக்கு தளர்வு அளிக்கிறது. அத்துடன் வாயு, வயிறு உப்புசம் ஆவதையும் தடுக்கிறது. இஞ்சி டீ பருகுவதன் மூலம் வயிறு உப்புசத்துக்கு உடனடி பலனை பெறலாம்

செயல்படுத்தப்பட்ட கரி உறிஞ்சக்கூடிய பொருளாக உள்ளது. இது செரிமான பாதையில் இருக்கும் வாயு உற்பத்தி பொருள்களுடன் பிணைக்கப்பட்டு அவற்றை அகற்ற உதவுகிறது. உணவுக்கு முன் கரி சார்ந்த சப்ளிமெண்ட்ஸ் அல்லது காப்ஸ்யூல்கள் எடுத்துக்கொள்வது வயிறு உப்புசம் மற்றும் வாயு பிரச்னையை போக்க உதவுகிறது

அழற்சிகள், வீக்கங்களுக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் கோமாமில் பூ டீ செரிமான பாதையை ரிலாக்ஸ் செய்து பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது. எனவே வயிற்று வலி, வயிறு உப்புசம் இருப்பவர்கள் கேமாமில் பூ டீயை பருகலாம் 

பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!